கொத்தமல்லி சட்னி

5 கருத்துகள்


கொத்தமல்லி சட்னி 

தேவையான பொருட்கள் : 

தேங்காய் - 1/2 மூடி
கொத்தமல்லி தழை - 1/2 கப்
பொட்டுகடலை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 3/4 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. மல்லிதழையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

2. மல்லிதழையுடன் தேங்காய், பொட்டுகடலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, 1/2 கப் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.


3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.



சுலபமாக செய்ய கூடிய கொத்தமல்லி சட்னி தயார்.

சன்னா மசாலா

4 கருத்துகள்


சன்னா மசாலா 

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைகடலை - 1/4 கிலோ
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
தக்காளி - 4
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - தலா 2
மல்லி, புதினா - 1/2 கப்

செய்முறை :

1. வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை மிக்சியில் அரைத்து வைக்கவும். கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 3 விசில் வரை வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்.



2. உருளைக்கிழங்கை நன்கு மசித்து  வைத்து கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.



4. பின்னர் இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போனதும் மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

5. மசித்த உருளைக்கிழங்கு, கடலையை சேர்த்து வதக்கி விடவும்.



6. தூள் வகைகள் , தயிர் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.



7. கடைசியாக அரைத்த தக்காளியையும் கரமசாலா பொடியையும் மேலே தூவி 1 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.



8. மசாலாவில் எண்ணெய் தெளிந்து மேலே வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான சன்னா மசாலா தயார்.

பூரி, பரோட்டா, சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

* புளிப்பு அதிகமாக இருப்பதாக நினைப்பவர்கள் தயிரை தவிர்த்து விட்டு அரைத்த தேங்காய் இருந்தால் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்தாலும் சுவை நன்றாக இருக்கும்.



 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes