முருங்கைகாய் பிரட்டல்


முருங்கைகாய் பிரட்டல்

தேவையான பொருட்கள் : 


முருங்கைகாய்  - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

1. முருங்கைகாயை அலசி விட்டு விரல் அளவு துண்டுகளாக்கி நடுவில் இரண்டாக கீறி வைக்கவும். வெங்காயத்தை  மெல்லியதாகவும் நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2.தேங்காயை சிறிது  தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

4. பின்னர் தூள் வகைகள் சேர்த்து சிறிது பிரட்டி விட்டு முருங்கைகாயை சேர்த்து 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.



5. முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து  இறக்கவும்.


எளிதில் செய்ய கூடிய முருங்கைகாய் பிரட்டல்  தயார்.

அனைத்து சாத வகைகளுக்கும் பொருத்தமான சைட்டிஷ்.

அசைவம் சாப்பிடுபவர்கள் விரும்பினால் சிறிது இறால், நெத்திலி கருவாடு தாளிக்கும் பொழுது போட்டு செய்தாலும் சுவையாக இருக்கும்.




2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes