புளி சாதம்


புளி சாதம்

தேவையான பொருட்கள் : 

சாதம் - 2 கப்
புளி - ஒரு சிறிய உருண்டை
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடிக்க :
வரமிளகாய் - 6
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை : 

1. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் சிவற வறுத்து மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.





2. புளியை திக்காக கரைத்து கொள்ளவும்.

3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.



4. பின்னர் புளி கரைசலை ஊற்றி கொதி வந்ததும் வறுத்து பொடித்த பொடியில் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு எண்ணெய் மேலே தெளிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.





5. வடித்த சாதத்தை கலவையுடன் நன்கு கலந்து மேலே நல்லெண்ணெய் ஊற்றி 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.



நல்லெண்ணெய் வாசத்துடன் புளி சாதம் தயார்.

சாதத்தை நன்கு கலந்து விட்டு விருப்பமான தொடுகறிகளுடன் பரிமாறவும்.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes