மீன் பொரியல்


மீன் பொரியல் 

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 + 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 1 + 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்

செய்முறை:

1. மீனை சுத்தம் செய்து 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 3 முறை நீர் விட்டு அலசி வைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் தூள் வகைகள், உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கலந்து வைக்கவும்.

3. பின்னர் மீனை அந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு பிசிறி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.



4. பானில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவரும் படி நன்கு பொறித்து எடுக்கவும்.



சுவையான மீன் பொரியல் தயார்.



* நான் இதில் கொடுவா மீன் பயன்படுத்தி உள்ளேன். எல்லா வகை மீன்களும் பயன்படுத்தலாம்.

* விரும்பினால் 1 ஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்து மீனில் பிசிறி வைக்கலாம். அதுவும் நன்றாக இருக்கும்.

2 கருத்துகள்:

  1. மீன் பொரியல் இங்கு வரை மணக்குது ஷமீ. இந்தியாவில் உள்ள மீன் என்பதலோ என்னவோ ! இந்தியாவில் எத்தனை மாதங்கள் லீவில் வந்திருக்கீங்க ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.

    ஆமாம் இங்குள்ள மீன் தான்..நம்ம ஊர் மீன் ருசிக்கு கேக்கவா வேணும் :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes