ஹாட் & சோர் சூப்

2 கருத்துகள்


ஹாட் & சோர் சூப்

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - 1 பாக்கெட்
நூடுல்ஸ் மசாலா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
குடைமிளகாய் - 1/2
முட்டை - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
சிக்கன் - சிறிது (விரும்பினால் )
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளி, கேரட்,குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

3.இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போனதும் சிக்கன், தக்காளி, கேரட், குடைமிளகாய் சேர்க்கவும்.

4. சாஸ் சேர்த்து பிரட்டி விட்டு நூடுல்ஸ் மசாலா,  தூள் வகைகளை சேர்த்து 4 கப் நீர் சேர்த்து கொதிக்க  விடவும்.


5. நூடுல்சை உடைத்து போட்டு 5 நிமிடம் வேக விடவும். கடைசியாக முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கவும்.

சுலபமாக செய்யகூடிய ஹாட் & சோர் சூப் தயார்.

ஸ்ப்ரிங் ஆனியன் தூவி பரிமாறலாம்.

* விரும்பிய காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்.

* நான் சிக்கன் எலும்பு தான் சேர்த்துள்ளேன். போன்லெஸ் சிக்கன் பயன்படுத்தினாலும் அருமையாக இருக்கும்.

எனது மற்ற சூப் வகைகள். 

பட்டாணி சூப்

ஹாட் சிக்கன் சூப்

கோதுமை ரவை கேசரி

2 கருத்துகள்


கோதுமை ரவை கேசரி 

தேவையான பொருட்கள் : 

கோதுமை ரவை : 1 கப்
சீனி - 3/4 கப்
மில்க்மெயிட் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
ஆரஞ்ச் புட்கலர் - சிறிது
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை : 

1. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து கொள்ளவும். பின்னர் அதே நெய்யில் ரவையை வாசம் வரும் வரை வறுத்து தட்டில் கொட்டி ஆற விடவும்.



2. 2 கப் நீருடன் புட்கலர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் ரவையை சிறிது சிறிதாக தூவி மூடி போட்டு வேக விடவும்.



3. ரவை வெந்ததும் சீனி, வறுத்த முந்திரியை சேர்க்கவும்.


4. சீனி இளகியதும் நெய், மில்க்மெயிட் சேர்த்து கிளறி விடவும்.



5. கேசரி நன்கு சுருண்டு கெட்டியாக வரும் பொழுது இறக்கவும்.


சுவையான கோதுமை ரவை கேசரி ரெடி.


நான் கம்மியாக தான் நெய் சேர்த்துள்ளேன். விரும்பினால் 1/4 கப் நெய் அதிகம் சேர்க்கலாம்.

எனது மற்ற கோதுமை  ரவை உணவுகள் :

கோதுமைரவை உப்புமா

கோதுமை ரவை பொங்கல்

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... - 2

2 கருத்துகள்


 ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... 

முதல்ல பூந்தோட்டத்துல  இருக்குற ஒரு கோவிலுக்கு போனோம். அது தான் முதல் முறை நான் கோவிலுக்கு போறது. அங்க ஒரு 30 நிமிடம் தான் இருந்திருப்போம். அப்புறம் அங்க இருந்து கிளம்பி திருவாரூர் கோவிலுக்கு போனோம்.

அதுக்குள்ள செம பசி வேற எல்லாருக்கும். கொண்டு வந்த ஸ்னாக்ஸ சாப்பிட்டுகிட்டு போனோம்.

அப்புறம் திருவாரூர் கோவில் போனதும் காலை டிபன் சாப்பிட்டாச்சு.

அப்புறமும் கோவில் எல்லாம் சுத்தி பார்த்துட்டு அடுத்து வேளாங்கண்ணி போனோம்.

அங்கயும் நான் போறது முதல் தடவைங்கிறதால ஆசையா தான் இருந்துச்சு.

ஸ்பெஷல் ப்ரேயர்ல எல்லாம் கலந்துகிட்டு கடைத்தெரு எல்லாம் சுத்தி பார்த்தோம்.

சர்ச் எல்லாம் மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள். பீச் தான் அந்தளவு 
சுத்தமாக இல்லை.

எல்லா தோழிகளும் வீட்டிற்கு என்று பெரிய சைஸ் மெழுகுவர்த்திகள் வாங்கினோம்.

மதிய உணவையும் அங்க முடிச்சுகிட்டு நாகூர் போனோம். இது நமக்கு தெரிஞ்ச இடம் பிரேயர் பண்ணிட்டு பர்சேஸ் தான்.

முன்னாடியே வேளாங்கன்னில என் சித்தி பையனுக்கு கிலுகிலுப்பை, பொம்மை எல்லாம் வாங்கிட்டேன் .


நாகூர் வந்து தம்ரூட், குலோப் ஜாமூன் தானே அம்மா வாங்குவாங்க நம்மளும் வாங்கணும்னு  எல்லாம் மறக்காம வாங்கியாச்சு.


என் ப்ரெண்ட் எங்க வீட்ல பூந்தி, கடலை எல்லாம் வாங்குவாங்க அதெல்லாம் நீ சாப்பிட மாட்டியான்னு கேட்க உடனே நம்ம சாப்பாட்டு புத்தி போகுமா நானும் சாப்பிடுவேன்பான்னு சொல்லி  அதையும் வாங்கிட்டேன்.

இப்படியே எல்லா காசையும் காலி பண்ணிட்டேன். அம்மா குடுத்த பணம் பத்தாம ப்ரெண்ட் கிட்ட கடன் வேற வாங்கிட்டேன் :) கடைசியா எனக்காக வாங்கினது ஒரு கீசெயின் தான்.


ஊர் திரும்ப பஸ் ஏறிட்டோம். போகும் பொழுது  கோபமா வந்த மேத்ஸ் மேம் கூட ஒரு நாள்ல ப்ரெண்ட் ஆயிட்டாங்க.

ஜாலியா பாட்டெல்லாம் பாடிக்கிட்டு வரும் பொழுது திடீரென்று ஒரு சத்தம். இஞ்சின்ல இருந்து தான் சவுண்டுன்னு நினைக்கிறேன். 

ட்ரைவர், கிளீனர் ரெண்டு பேரும் ரொம்ப நேரம் முயற்சி பண்ணி பார்த்துட்டு திரு திருன்னு முழிக்கிறாங்க.

எங்க மேம் வேற சீக்கிரம் சரி பண்ணுங்க வயசு பொண்ணுங்களை  வச்சுக்கிட்டு ரோட்ல நிக்க முடியுமான்னு டென்ஷன் ஆகுறாங்க.

அந்த இடம் வேற நல்ல காடு மாதிரி இருந்துச்சு. வேற பஸ், கார் எதுவும் வரலை. அப்போ தான் எனக்கே பயமா இருந்துச்சு. காலைல இருந்து அனுபவிச்ச சந்தோஷம் எல்லாம் போயிடுச்சு.

ட்ரைவர் யாராவது மெக்கானிக் இருந்தா கூட்டிகிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டார்.

டூவீலர்ல போற வர பசங்க எல்லாம் பஸ்ஸ தட்டி சவுண்ட் குடுக்குறாங்க. மேம் உடனே எல்லாரையும் அமைதியா இருக்க சொல்லிட்டு லைட் எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டாங்க.

எல்லாரும் நடுங்கி போய் இருக்கோம்.எங்க க்ரூப்ல ஷாலினி என்று ஒரு பெண். அவ தான் ஆரம்பிச்சு வச்சா. அவளை  பார்த்து  எல்லாரும் ஒரே அழுகை தான்.

இதுல நான் என் ப்ரெண்ட் மடில வேற படுத்துக்கிட்டு அழறேன். அதை வச்சே பின்னாட்களில் அவ என்னை கலாய்ச்சிகிட்டு இருப்பா.

அப்போ எங்க யார் கிட்டயும் செல் கூட இல்லை மேம் உட்பட.

ஒரு வழிய மெக்கானிக் வந்து ரிப்பேர் பார்த்து 9.30க்கு கிளம்பினோம். திரும்ப போய் சேரும் பொழுது 10.30 ஆயிடுச்சு. எங்க வீட்ல இருந்து  அம்மா, தாத்தா, பாட்டின்னு எல்லாரும் வந்துருக்காங்க.

எல்லா ப்ரெண்ட்ஸ் வீட்லயும் இதே கதை தான். சிஸ்டர் கிட்ட சில பேரன்ட்ஸ் சண்டை கூட போட்டுருக்காங்க. சிஸ்டர் எல்லாரையும் கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு எங்களை அனுப்பி வச்சாங்க.

ஒரு சில மணி நேரம் தான் என்றாலும் அப்போ அனுபவிச்ச பயம் இப்போவும் நினைவு இருக்கும். சில நேரம் பள்ளி தோழிகள் சந்திக்கும் பொழுது இதை சொல்லி சிரிப்போம். 

வீட்டிற்கு வந்து நான் வாங்கிய பொருட்களை எல்லாம் காட்டியதும் ஒரே சந்தோஷம் தான்.

ஆனால் அம்மா மட்டும் இதற்கு தான் உன்னை தனியே அனுப்ப மாட்டேன் என்று சொல்வது என்று வருத்தப்பட்டார்கள் .

அதனால் கல்லூரி சுற்றுலாவிற்கு அனுப்பவே மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். அவரது அன்பை புரிந்து நானும் செல்லவில்லை.

எனது பள்ளி சுற்றுலா அனுபவத்தை  பொறுமையாக படித்ததற்கு மிக்க நன்றி.


உருளை ஃப்ரை

5 கருத்துகள்


உருளை ஃப்ரை

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.உருளைக்கிழங்கை பொடியாக அரிந்து நீரில் நன்கு அலசிக் கொள்ளவும்.
   வெங்காயத்தை  மெல்லியதாகவும், மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.
2.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்  கடுகு தாளித்து    உருளைக்கிழங்கை  சேர்த்து நன்கு வதக்கவும்.


3.தூள் வகைகள் சேர்த்து  பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.


4.உருளைக்கிழங்கு வெந்து வரும் பொழுது வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லிதழை சேர்த்து பிரட்டி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.


இந்த முறையில்  உருளை ஃப்ரை செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 1

2 கருத்துகள்

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... 


சில நேரங்களில் நாம் சிறு வயது நினைவுகளை மனதிற்குள் நினைத்து பார்த்து மகிழ்கிறோம்ல அதான் இந்த டைட்டில்.

டைட்டில் காரணத்தை சொல்லியாச்சு இனிமே மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியது தான்........

அப்போ அப்போ என் சிறு வயது ஞாங்களை  ரங்க்ஸ் கிட்ட சொல்றதுண்டு. அவரும் ரசிச்சு கேட்டாலும் கடைசியா இதுக்கு தான் இவ்வளவு பில்டப் குடுத்தியான்னு பல்ப் குடுப்பார்.

வேற ஒண்ணுமில்லை, நான் இவ்வளவு அறிவாளியா இருந்திருக்கேன்னு ஒரு கடுப்பு தான் ரங்க்ஸ்க்கு....

ஓகே...இப்போ இந்த பதிவுல நான் போன ஸ்கூல் பிக்னிக் பத்தி சொல்றேன்.

நான் பிக்னிக் எல்லாம் அதிகமா போனதே இல்லை.

அதுக்கு காரணம் என்னன்னா அம்மா எங்கயும் என்ன தனியா அனுப்ப பயப்படுவாங்க.

ஒரு தடவை 4வது படிக்கும் பொழுது மாமாக்கு மேரேஜ் ஆச்சு. ஒன்னு விட்ட மாமா தான்.ஆனாலும் ரொம்ப அன்பா இருப்போம்.

அப்போ அவங்க வீட்ல எல்லாரும் பூம்புகார் போக முடிவு பண்ணினாங்க. எங்க வீட்ல கூப்பிட்டதுக்கு அம்மா, சித்தி எல்லாம் வரலை.

என்னையும் எங்க அம்மம்மாவையும் (பாட்டி) போக சொன்னாங்க.

இதுக்கு முன்னாடி பூம்புகார் அத்தா கூட எல்லாம் போயிருக்கேன்னாலும் இப்போ எல்லாரும் சேர்ந்து போறதுல எனக்கு ஒரே குஷி.

ஸ்கூல்ல வேற வந்து அழைச்சிட்டு போக போறாங்கன்னு சொன்னதும் கூட படிக்குறவங்க  கிட்ட எல்லாம் சொல்லியாச்சு.

என்னையும் இன்னொரு உறவுக்கார  பெண்ணையும் வந்து கூட்டிக்கிட்டு வேன்ல போனாங்க.


வேன்ல ஏறினதும் பார்த்தா எல்லாரும் பாட்டியா இருக்காங்க. புதுசா மேரேஜ் ஆனவங்க, நாலைஞ்சு  பாட்டிஸ் அப்புறம் எங்கள மாதிரி 4 குட்டீஸ் அவ்ளோ தான்.செம போர் ஆயிடுச்சு :(

சரியாக பூம்புகாரை அடைந்ததும் மழை கொட்ட தொடங்கியது. வேனை விட்டு கீழே இறங்க கூடவில்லை. கொண்டு போன கட்டு சாதம் எல்லாம் காலி பண்ணிட்டு கிளம்பி வந்தாச்சு.

எங்க அம்மம்மா ரொம்ப சுத்தம் பார்ப்பாங்க. மழை லேசா விட்டதும் மாமா, மாமி எல்லாம் பீச் பக்கம் போனாங்க. இவங்க என்னை இறங்கவே விடலை. கடைசி வரைக்கும் வேன்ல தான் இருந்தோம்.

சாப்பிடுறதுக்கு தான் பிக்னிக் போனியான்னு என் பிரெண்ட்ஸ் எல்லாரும் கிண்டல் வேற பண்ணினாங்க. இதுக்கு போயிருக்கவே வேணாம்ன்னு புலம்பிகிட்டே இருந்தேன்.

அதுக்கு அப்புறம் பிக்னிக் எல்லாம் போனதே இல்லை.

பிரெண்ட்ஸ் போய்ட்டு வந்து கதை சொன்னா கேட்டுகிறதோட சரி..

நான் +1, +2 படிச்சது ஒரு கிறிஸ்டியன் கான்வென்ட்ல...  அங்க எப்போதும் 10வது, 12வது படிக்குற பொண்ணுங்களை பிக்னிக் கூட்டிகிட்டு போவாங்க. மார்ச்ல எக்ஸாம் வருதுன்னா ஜனவரி, பிப்ரவரில தான் போவோம்.

பிக்னிக்னா எல்லாரும் போற மாதிரி சுற்றுலா தளம் எல்லாம் இல்லை.இது பக்தி டூர் ...........

ஒரு கோவில், சர்ச், தர்கா இப்படி தான்.. அங்க போயி நாங்க இந்த வருஷம் பாஸ் பண்ணனும் நிறைய மார்க் வாங்கனும்னு பிரே பண்றதுக்கு தான்.

எப்பவும் போல அம்மா விட மாட்டேன்னுட்டாங்க ...அப்புறம் மார்னிங்  போயிட்டு ஈவ்னிங்க்குள்ள வந்துடுவோம்ன்னு சொல்லி ஒரு வழியா அனுமதி வாங்கியாச்சு.

நாங்க 50 கேர்ள்ஸ், ஒரு மேம், லேப் அசிஸ்டென்ட் மேம் ஒருத்தவங்க தான் போனோம்.

காலைல 5 மணிக்கு எல்லாம் வந்துடனும். 5.30க்கு பஸ் கிளம்பிடும்ன்னு சொல்லிட்டாங்க.

காலை, மதியம் சாப்பிட வீட்ல இருந்து தான் சாப்பாடு எடுத்து வரணும்னு சொல்லிட்டாங்க. வெளில எல்லாம் சாப்பிட அலவ் கிடையாது.

ப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் டிஸ்கஸ் பண்ணி என்ன சாப்பாடு எடுத்து வரணும்னு தான் மெனு போட்டு அம்மா கிட்ட சொல்லியாச்சு.


காலைல சாப்பாடு எல்லாம் குடுத்து பாக்கெட் மணி வேற தந்து தாத்தா ஸ்கூல்ல கொண்டு போயி விட்டாங்க.

இதுல எனக்கு ரொம்ப கடுப்பான விஷயம் என்னன்னா யூனிபாம்ல தான் போகணும்னு வேற கண்டிப்பா சொல்லிட்டாங்க. 

5.15கே போயி பார்த்தா எங்க க்ரூப்ல என்ன மாதிரி நாலு பேர் தான் வந்துருக்காங்க ஒருத்தரையும் காணோம். 

எங்க தாத்தா வேற இதுக்கு தான் இப்படி அரை தூக்கத்துல அழைச்சுகிட்டு வந்தியான்னு  டோஸ் வேற. அவங்களும் போகாம அங்கேயே இருந்தாங்க.

மத்த கேர்ல்ஸ் வந்ததும் தான் தெரிஞ்சுது சும்மா தான் சொல்லுவாங்க 5.30க்கு எல்லாம் கிளம்ப மாட்டாங்கன்னு.

அவங்க எல்லாரும் 10த்ல ஒரு தடவை டூர் போன அனுபவம் வேற.
ஒரு வழியா மேம், கேர்ல்ஸ் எல்லாரும் வந்தாச்சு.பஸ் வரலை.

அப்புறம் பல போன் பண்ணினதும் ஒரு பழைய பஸ் வந்தது. அப்போவே பக்குன்னு இருந்துச்சு. சரின்னு 7 மணிக்கு கிளம்பினோம்.

அப்போ எங்க கூட வந்தது மேத்ஸ் எடுக்குற மேம் அவங்க சிரிக்குறதுக்கு கூட காசு கொடுக்கணும். அதனால அமைதியா வந்தோம்.

பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.






      


கொண்டைக்கடலை குருமா

4 கருத்துகள்



கொண்டைக்கடலை குருமா 

தேவையான பொருட்கள் :

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கறிமசாலா தூள் / தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப்
பட்டை, கிராம்பு , ஏலக்காய் - தலா 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில கீறி வைக்கவும். தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.கடலையை 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. குக்கரில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.கடலையை சேர்க்கவும்.


4. தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும்.1 கப் நீர் சேர்க்கவும்.

5.கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 1 விசில் வைக்கவும்.

சுவையான கொண்டைக்கடலை குருமா  தயார்.
இது பரோட்டா, ஆப்பம், இடியாப்பம் வகைகளுடன் நன்கு பொருந்தும்.

மற்ற குருமா வகையை காண :

ஸ்பைசி அவல்

3 கருத்துகள்


ஸ்பைசி  அவல்

தேவையான பொருட்கள் : 

அவல் - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய்  - 1
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1.அவலை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து வடித்து
   கொள்ளவும்.வெங்காயம்,மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு , கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மிளகாய் , உப்பு சேர்த்து வதக்கவும்.


3. வெங்காயம் சிவற வதங்கியதும் தூள் வகைகள் சேர்க்கவும்.


4. கடைசியாக அவலை சேர்த்து பிரட்டி விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கவும்.


எளிதில் செய்யக்கூடிய ஸ்பைசி  அவல் தயார்.


சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

மல்லி புதினா இருந்தால் பொடியாக நறுக்கி மேலே தூவினால் வாசமாக இருக்கும்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes