நன்னாரி கடல்பாசி



நன்னாரி கடல்பாசி

தேவையான பொருட்கள் :

கடல்பாசி - கைப்பிடி அளவு
சீனி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
நன்னாரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன்
பாண்டன் இலை - 4 துண்டு
தண்ணீர் - 3 கப்

செய்முறை :
1. பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்..
2. லேசாக கொதி வந்ததும் கடல்பாசியை சேர்த்து நன்கு கரையும் வரை கைவிடாமல் கிளறவும்.பாண்டன் இலையை கழுவி விட்டு அதில் போடவும்.



3.பின்னர் சீனி , உப்பு சேர்த்து கரைந்து வந்ததும் நன்னாரி சிரப் சேர்த்து அடுப்பை அணைக்கவும்..


4.அகலமான தட்டில் வடிகட்டி ஆறவிடவும்..


5.ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்...ஃபிரிட்ஜில் வைத்து சில்லென்று  சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.


பாண்டன் இலை, நன்னாரி வாசத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes