இறால் கொழுக்கட்டை

1 கருத்துகள்



இறால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 2 கப்
இறால் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - 1 ஸ்பூன் 
எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. வெங்காயம்,பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.இறாலை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பின்னர் இறால், உப்பு, கறிவேப்பிலை, தூள் வகைகள் சேர்க்கவும்.
4. இறால் நன்கு மசாலாவுடன் வதங்கியதும் தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.


5. அரிசி மாவுடன் இந்த கலவையை சேர்த்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.




6. பின்னர் உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைக்கவும்.



7. சுவையான இறால் கொழுக்கட்டை தயார்.



* காரமாக வேண்டும் என்றால் மிளகாய் அளவை கூட்டி கொள்ளலாம்.
* மல்லி புதினா இருந்தால் பொடியாக நறுக்கி போட்டாலும் மணமாக      இருக்கும்.என்னிடம் கைவசம் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.
*என் மாமியார் இறாலை வேக வைத்து மிக்சியில் 2 சுற்று சுற்றி              போடுவார்கள். அதுவும் நன்றாக இருக்கும்.
*ஆவியில் வேக வைப்பதால் அனைத்து வயதினரும் பயமின்றி    சாப்பிடலாம்.


கொழுக்கட்டைகளை படமெடுக்க மறந்து விட்டேன்.கடைசியாக மீந்த ஒரு கொழுக்கட்டை வைத்து ஒப்பேற்றி உள்ளேன்.அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.......

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes