வெஜ் குருமா



வெஜ் குருமா

தேவையான பொருட்கள் : 

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
உருளை - 1 (பெரியது)
கேரட் - 1
காளிஃப்ளவர் - 1 கப்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
தேங்காய்ப்பூ - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள்  - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
புதினா - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி

செய்முறை:

1.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.. 1 பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்..
தேங்காய்ப்பூவுடன் 2 பச்சை மிளகாய் புதினா சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
உருளை, கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.காளிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து சுடு நீரில் 2 நிமிடம் போட்டு வைக்கவும்.
2.சட்டியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு சேர்க்கவும்..
3.பின்னர் வெங்காயம் ,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்...வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்...பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்...



4.அதன் பின்னர் மஞ்சள் தூள் , மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும்...



5.உருளை, கேரட், காளிஃப்ளவரை சேர்த்து பிரட்டி விடவும்.



6.பின்னர் தேங்காய் விழுது, 1 கப் நீர் சேர்த்து 1 விசில் வந்ததும் இறக்கவும்.



7.காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து புதினா வாசத்துடன் நன்றாக இருக்கும்.






சுவையான வெஜ் குருமா தயார்..

இது சப்பாத்தி , பரோட்டா அனைத்திற்கும் ஏற்றது...

4 கருத்துகள்:

  1. வெஜ் குருமா அருமையான சைட் டிஷ் ! ஷமி நீங்க work பண்ணுதீங்களா ?

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அருமை, குருமா சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு மிக்க நன்றி சாரதாம்மா..
    ஆமாம் மா..ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

    கருத்துக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes