சிங்கப்பூரின் சிற்பி

0 கருத்துகள்


சிங்கப்பூரின் சிற்பி என்று அனைவராலும் அழைக்கப்படும்
முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ இன்று (23.03.2015) அதிகாலை 3.18 க்கு காலமானார்.
துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூரை புகழ்மிக்க வர்த்தக நகரமாக மாற்றிய பெருமை திரு.லீயையே சென்றடையும்.
இந்த ஆண்டு 50 ஆவது சுதந்திர தினத்தை மிக கோலாகலமாக கொண்டாட திரு.லீ உத்தரவிட்டிருந்தார்
அதற்கான கொண்டாட்டங்களில் இப்பொழுதிலிருந்தே மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
அதற்காக அரசும் பல்வேறு விதமான சலுகைகளை இந்நாட்டு மக்களுக்கு அனைத்து துறைகளிலும் வழங்கி வருகிறது.
இந்த நேரத்தில் திரு.லீ அவர்களின் மறைவு இந்நாட்டில் வசிக்கும் அனைவரையும் மிக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

"சிங்கப்பூரை பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் தமிழர்கள்.
இந்திய மொழி எனில் தமிழ்மொழி. 
எனவே தமிழ் தான் இங்கு ஆட்சிமொழி. 
இந்திக்கு இங்கு இடமில்லை " 

என்று நம் தமிழர்களுக்காக பாடுபட்டவர் திரு. லீ.

ஒரு உன்னதமான தலைவரை சிங்கப்பூர் மட்டுமல்ல இந்த உலகமே இழந்து விட்டது.
இது போல் மீண்டும் ஒருவர் பிறந்து பலரது அன்பை சம்பாதித்து மிக சிறந்த மனிதராக பொது வாழ்க்கையில் வாழ்வது சந்தேகத்திற்க்குரியதே.

லெமன் ரைஸ்

4 கருத்துகள்



லெமன் ரைஸ்

தேவையான பொருட்கள் : 

சாதம் - 1 கப்
எலுமிச்சை - 1 (சிறியது)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை : 

1. எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
2. பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க குடுத்தவற்றை தாளித்து சாதம் சேர்த்து பிரட்டவும்.


3.அதனுடன் எலுமிச்சைசாறையும் கலந்து விடவும்.


4.நன்கு சூடு வந்ததும் அடுப்பை அணைக்கவும். மல்லிதழையை தூவவும்.


எளிதில் செய்யகூடிய லெமன் ரைஸ் ரெடி.
பொருத்தமான சைட்டிஷ் உடன் பரிமாறவும்.




மினி போண்டா

7 கருத்துகள்

திடீர் விருந்தினர்கள் வரும்பொழுது சுலபமாக தயாரிக்கலாம்..சுவையும் நன்றாகவே இருக்கிறது.

இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது 1/2 கப் உளுந்து எடுத்து வைத்துக் கொண்டு இது போல் செய்தாலும் வசதியாக இருக்கும்.



மினி போண்டா

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
ரவை - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை : 

உளுந்தை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த உளுந்துடன் மிளகாய், மிளகு, சீரகம், உப்பு ,இஞ்சி ஆகியவற்றுடன் சேர்த்து வடை மாவு பதத்திற்க்கு அரைக்கவும்.

சட்டியில் எண்ணெய்யை காய வைத்து சிறிய உருண்டைகளாக போட்டு எடுத்தால் மினி போண்டா தயார்.



தேங்காயை கீறி சேர்த்தால் சுவை கூடும்.என்னிடம் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
மல்லிதழை,புதினா, கறிவேப்பிலை கூட நறுக்கி சேர்க்கலாம்.

Iron Mosque

4 கருத்துகள்



Iron Mosque - Malaysia

நான்கு புறமும் நீர் சூழ்ந்த அழகான ஆச்சரியமான பள்ளிவாசல் இது.
பள்ளியின் முழு பெயர் மிசான் சைனுல் ஆபிதீன் பள்ளி.

Iron Mosque என்றே அனைவரும் சொல்கிறார்கள்.

அங்கு சில க்ளிக்ஸ் மட்டுமே எடுக்க முடிந்தது.





கடந்த மாதம் எங்களின் திருமண நாளிற்காக செய்த குலோப்ஜாமூன்..
நீங்களும் சாப்பிடுங்க.........



மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes