மீ கொரிங்

4 கருத்துகள்





மீ கொரிங்

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - 2 பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய்- 1
பட்டாணி - 1/2 கப்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
(அல்லது)மேகி மசாலா பாக்கெட் - 2
உப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஹாட் டாக் - 2
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மல்லிதழை, புதினா சிறிது.

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீரி வைக்கவும். 

2. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யில் பாதி  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.மொறுமொறுப்பாக இருக்க வேன்டும்.



3. நூடுல்ஸை 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி கொள்ளவும். ஹாட்டாகை கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

4. கடாயில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




5. ஹாட்டாகையும், பட்டாணியையும் சேர்த்து கிளறி விடவும் மேகி மசாலா சேர்க்கவும்.




6. பின்னர் சாஸ் வகைகள் சேர்த்து நூடுல்ஸையும் சேர்த்து பிரட்டி அடுப்பில் 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.




ஹாட்டாக் சேர்க்க விரும்பாதவர்கள் கேரட் குடமிளகாய் சேர்க்கலாம் அல்லது முட்டை சேர்க்கலாம்.
முட்டை சேர்க்கும்பொழுது கடைசியாக கொத்தி விட்டு சேர்க்கவும்.

இறுதியில் ஃப்ரைட் ஆனியன் தூவி பரிமாறவும்.




சிங்கப்பூர் ஸ்பெஷல் மீ கொரிங் தயார்.



புத்ரா மசூதி - மலேசியா

4 கருத்துகள்



புத்ரா மசூதி - மலேசியா

கடந்த வருட புத்தாண்டு விடுமுறையின் பொழுது மலேசியா சென்றோம்.
அங்கு KL இல் நாங்கள் சென்ற புகழ் பெற்ற மசூதிகளில் எடுத்த சில கிளிக்ஸ்.

புத்ரஜயாவில் என் கணவர் இந்த இரு இடங்களுக்கும் செல்ல ஆசைபட்டதால் அங்கு சென்றோம்.


1. புத்ரா மசூதி (Putra Mosque)





அங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு கூட சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கி போன்று குடுத்து அணிந்து பள்ளி உள்ளே வர சொல்லுகிறார்கள்.



புத்ரஜயாவில் புத்ரா மசூதி தவிர இன்னொரு பள்ளியும் மிக புகழ் பெற்றது. அதனை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நாங்கள் சென்ற உறவினர் வீட்டில் வெற்றிலை செடி இருந்தது.நான் இதுவரை பார்த்ததில்லை அதையும் ஒரு கிளிக் உங்களுக்காக.



சிக்கன் கறி

0 கருத்துகள்


சிக்கன் கறி

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய்- 2
உருளை - 1 (பெரியது)
பட்டை, கிராம்பு ,ஏலம் - தலா 1
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் நெய் சேர்த்து - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை சிறிது.

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீரி வைக்கவும். உருளையை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

2. குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலம் தாளித்து வெங்காயம் மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்.



3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.சுத்தம் செய்த கோழியை சேர்க்கவும்.




4. தூள் வகைகள் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் விழுது உருளை சேர்த்து 1 கப் நீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வைத்து இருக்கவும்.





மல்லிதழை தூவி பரிமாறவும்.

இது பரோட்டா இடியாப்பம் நெய்சாத வகைகளுடன் நன்கு பொருந்தும்.







தேங்காய்பால் கஞ்சி

2 கருத்துகள்




தேங்காய்பால் கஞ்சி

தேவையான பொருட்கள் : 

புழுங்கல் அரிசி - 1/2 கப்
தேங்காய்பால் - 1 கப்
முழுபூண்டு - 1
வெந்தயம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

1. அரிசியை களைந்து கொள்ளவும். குக்கரில் அரிசியுடன் உரித்த பூண்டு, வெந்தயம், உப்பு ஆகியவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். / 4 விசில் சரியாக இருக்கும்.





2. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து நன்கு கஞ்சியை மசித்து பின் தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி விடவும்.



3.பூண்டு வாசத்துடன் சுவையான தேங்காய்பால் கஞ்சி தயார்.




இதனுடன் புளி சம்பல் சேர்த்து  சாப்பிட சுவையாக இருக்கும்.என் கணவர் வீட்டில் கஞ்சியுடன் மோர் மிளகாய் ,கீரை வத்தல் ,அரிசி படையான் பொரித்தும் தருவார்களாம்.

சிறு வயதில் வீட்டில் மாதம் இருமுறையாவது இந்த கஞ்சி செய்வார்கள்.

இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் பாரம்பரியமான சிற்றுண்டி இது.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes