முட்டை குருமா

5 கருத்துகள்



முட்டை குருமா

தேவையான பொருட்கள் : 

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
முட்டை - 2
தேங்காய் பால் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்..பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்..
2.சட்டியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு சேர்க்கவும்..



3.பின்னர் வெங்காயம் ,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்...வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்...பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்...



4.அதன் பின்னர் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , பெருஞ்சீரகத் தூள்,  கறிவேப்பில்லை சேர்க்கவும்...



5.தேங்காய் பாலில் மல்லி தூள் , உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்..
இதனை சட்டியில் ஊற்றி மூடி 5 நிமிடம் கொதிக்க விடவும்...



6.கொதி வந்ததும் 2 முட்டைகளையும் அதில் உடைத்து ஊற்றவும்...



7.பின்னர் சட்டியை மூடி 5 நிமிடம் கொதித்து எண்ணைய் பிரிந்து வந்ததும் இறக்கவும்...
சுவையான முட்டை குருமா தயார்..
இது சாதம் , ஆப்பம் , சப்பாத்தி , பரோட்டா அனைத்திற்கும் ஏற்றது...




பாகற்காய் பொரியல்

5 கருத்துகள்




பாகற்காய் பொரில்

தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
முட்டை - 1
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்

செய்முறை :

1.பாகற்காயை பொடியாக அரிந்து 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.வெங்காயத்தை மெல்லியதாகவும் , பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.
2.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் , மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து  வதக்கவும்.



3.பாகற்காயை நன்கு அலசி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



4.பின் பாகற்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.



5.காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கொத்தி விட்டு மல்லிதழை தூவி இறக்கவும்.



முட்டை பிடிக்காதவர்கள் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கலாம்.


சுவையான பாகற்காய் பொரியல் தயார்.


 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes