ஃபிஷ் ஃப்ரை

6 கருத்துகள்

ஃபிஷ் ஃப்ரை




தேவையான பொருட்கள் :

மீன் - 4 துண்டுகள்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஸ்பைசி ப்ரெட் க்ரம்ப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

1. மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு அலசி கொள்ளவும்.
2. பின்னர் மீனுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது , உப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்கு பிரட்டி ப்ரிட்ஜில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.


3.பானில் எண்ணெய் ஊற்றி சூடானது ஊறிய மீன் துண்டுகளை ப்ரட் க்ரம்ப்சில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.



4.மொறு மொறுப்பான ஃபிஷ் ஃப்ரை  தயார்.



சிக்கன் மசாலாவில் மீன் பொரித்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

சூடான சாதத்துடன் பக்க உணவாக பரிமாறலாம்.

கொத்து பரோட்டா

3 கருத்துகள்

கொத்து பரோட்டா




தேவையான பொருட்கள் : 

பரோட்டா - 4
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கோழி குருமா - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
முட்டை - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1.பரோட்டாவை சுட்டு சிறு சிறு துண்டுகளாக்கி மிக்சியில் விப்பரில் 2 சுற்று சுற்றி எடுக்கவும்.
2.வெங்காயத்தை மெல்லியதாகவும், பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கி கொள்ளவும். கேரட்டை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் , மிளகாய் , கேரட் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4.கோழி குருமா, தூள் வகைகள் , உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை பிரட்டவும்..கடைசியாக முட்டை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.
5.உதிர்த்து வைத்துள்ள பரோட்டாவை மசாலாவில் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6.பரிமாறும் முன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

எளிதில் செய்ய கூடிய சுவையான கொத்து பரோட்டா தயார்.
லன்ச் பாக்சுக்கு ஏற்ற சிற்றுண்டி.

போன்லெஸ் சிக்கன் , மற்ற காய்கறிகள் சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும்.
காலையில் செய்த பரோட்டா , கோழி குருமா இருந்தால் இரவு டிபனாக இப்படி செய்யலாம்.



ப்ரோக்கோலி மசாலா

2 கருத்துகள்

ப்ரோக்கோலி மசாலா




ப்ரோக்கோலி பயன்கள்

1.புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
2.இதய நோயை தடுக்கிறது.
3.தைராய்டு சுரப்பை மட்டுபடுத்துகிறது.

ப்ரோக்கோலி மசாலா



தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/2
உருளைக்கிழங்கு - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. ப்ரோக்கோலியை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.உருளையை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயம், குடைமிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பின்னர் ப்ரோக்கோலி , உருளையை சேர்த்து வதக்கவும்.
5. தூள் வகைகள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6. 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்..மூடி போட்டு வேக விடவும்.
7. காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.


சுவையான ப்ரோக்கோலி உருளை மசாலா தயார்.

அனைத்து குழம்பு வகைகளுக்கும் , வெரைட்டி  ரைஸ்க்கும் ஏற்ற பக்க உணவு..

கடாய் சிக்கன்

1 கருத்துகள்



ஞாயிறுக்கிழமைக்களில் எல்லோர் வீட்டிலும் ஸ்பெஷல் மெனு தானே..
இன்று எங்கள் வீட்டு மெனு.
நெய் சாதம்
தால்ச்சா
கடாய் சிக்கன்
மாங்காய் பச்சடி
ரவா கஞ்சி (இனிப்புக்கு).
கடாய் சிக்கன் குறிப்பை இப்பொழுது பகிர்கிறேன்.மற்ற குறிப்புகள் பிறகு பதிவிடுகிறேன் :)


கடாய் சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலொ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு , ஏலக்காய் - தலா 2

செய்முறை :

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. சுத்தம் செய்த சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, 1/4 கப் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு சேர்த்து பிரட்டி ப்ரிட்ஜில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.
4. பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
5. ஊறிய சிக்கன் கலவையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும்..பாதி வெந்ததும் மீதியுள்ள தயிரை சேர்த்து சிம்மில் வைத்து விடவும்.


6. சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மிளகு தூளை தூவி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
நான் இதற்க்கு ப்ரெஷ் மிளகு தூள் சேர்த்துள்ளேன்..


கம கம வாசனையுடன் கடாய் சிக்கன் தயார்.


இது பிரியாணி, நெய் சாதம் ஆகியவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.
பரோட்டா, நாண், சப்பாத்தி போன்றவற்றுக்கும் பக்க உணவாக பறிமாறலாம்.

காலிஃப்ளவர் 65

0 கருத்துகள்

காலிஃப்ளவர் 65

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் (சிறியது) - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கலர் பவுடர் - சிறிது (விரும்பினால்)
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :

1. காலிஃப்ளவரை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.அதனை உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.பூச்சி எதுவும் இருந்தால் வந்து விடும்.
2. பின்னர் அதனை வடித்து ஒரு பவுலில் போடவும்..அத்துடன் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும்.


3. ஃப்ரிட்ஜில் இந்த கலவையை 1 மணி நேரம் வைத்திருக்கவும்.
4. பிறகு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..


சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.

பட்டாணி சூப்

5 கருத்துகள்

பட்டாணி சூப்


இந்த சூப் செய்முறை எனது தந்தை எனக்கு சொல்லி தந்தது..சமீபத்தில் தான் செய்து பார்த்தேன்..ருசி நன்றாக இருந்தது....
10 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம்..இதில் பட்டாணிக்கு பதில் அசைவம் விரும்புபவர்கள் சிக்கன் சேர்த்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
பட்டாணி (வேக வைத்தது) - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
ஜீரக தூள் - 1/2 ஸ்பூன்
சேமியா - 1/2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி, இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
3.பின்னர் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
4.தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.  3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
5.கொதித்ததும் சேமியாவை அதில் சேர்த்து வெந்து மேலே வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய பட்டாணி சூப் தயார்...
மாலை வேளைகளில் பருக இதமாக இருக்கும்.


Gardens By The Bay

2 கருத்துகள்



சமீபத்தில் வந்த விடுமுறை நாளில் Gardens By The Bayக்கு சென்றோம்..
பார்ப்பதற்க்கு மிகவும் அழகான பசுமையான இடம்..
இரவு நேரத்தில் விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கிறது.
விளக்குகள் பல வர்ணங்களில் மாறி மாறி ஒளிர்வது கொள்ளை அழகு...
நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..





அங்கிருந்து பார்த்தால் Marina Bay Sands முழு தோற்றம்...


ஹெரிடேஜ் கார்டன் , ஃப்ளவர் டோம் எல்லாம் தாமதமாக போனதால் பார்க்க முடியவில்லை..
அடுத்த முறை சென்று வந்தால் படங்களை பகிர்கிறேன்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes