தக்காளி ரசம்

0 கருத்துகள்


தக்காளி ரசம்

தேவையான பொருட்கள் :

தக்காளி - 2
பூண்டு - 5 பல்
முழு மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3 அல்லது 4
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லிதழை - சிறிது

செய்முறை :

1.பூண்டு, வரமிளகாய், மிளகு, சீரகம் இவற்றை மிக்சியில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.


2.புளியை ஊற வைத்து புளித்தண்ணீர் 1 கப் எடுத்துக் கொள்ளவும்.

3.ஒரு பவுலில் புளி தண்ணீர், பொடித்த பொடியில் பாதி , அரிந்த தக்காளி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்..தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.



4. சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து வைத்து இருக்கும் ரசத்தை ஊற்றவும்.


5.நுரைக்க தொடங்கியதும் அடுப்பை அணைத்து மல்லிதழை தூவி இறக்கவும்.ரசத்தை கொதிக்க விட கூடாது..

சுவையான எளிதில் செய்ய கூடிய தக்காளி ரசம் தயார்.



நுரையீரல் பொரியல்

1 கருத்துகள்




நுரையீரல் பொரியல்

தேவையான பொருட்கள் :

நுரையீரல் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
ஜீரக தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2


செய்முறை : 

1. நுரையீரலை தோல் உரித்து நன்கு அலசி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.



2. குக்கரில் எண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம், உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும்.

3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.



4. நுரையீரலை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்...தூள் வகைகளை சேர்த்து தூள் வாசம் போகும் வரை பிரட்டி 1/2 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.



5. கறி நன்றாக வெந்து தண்ணீர் வற்றி பொரியல் பதமாக இருக்கும்..தண்ணீர் அதிகமாக இருந்தால் வற்றும் வரை அடுப்பில் சிம்மில் வைக்கவும்..



சுவையான நுரையீரல் பொரியல் தயார்..பக்க உணவாக எந்த உணவுடனும் சாப்பிடலாம்.



ஹாட் சிக்கன் சூப்

3 கருத்துகள்



ஹாட் சிக்கன் சூப்

தேவையான பொருட்கள் : 

சிக்கன் - 4 துண்டுகள் 
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சேமியா - 1 கைப்பிடி
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிது

செய்முறை : 

1.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

2.இஞ்சிபூண்டு விழுது,  தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.



3.பின்னர் தூள் வகைகள் , உப்பு சேர்த்து நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்...


4.சிக்கன் வெந்ததும் சேமியாவை சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.


சுவையான ஹாட் சிக்கன் சூப் தயார்...
10 நிமிடத்தில் தயார் செய்து விடலாம்..



பெப்பர் சிக்கன்

0 கருத்துகள்




பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
ப்ரெஷாக பொடித்த மிளகு - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லி புதினா - தேவைக்கு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு தாளிக்கவும்.பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


2. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின்னர் சிக்கன் சேர்க்கவும்.


3. தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.


4. சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது பொடித்த மிளகு தூவி கறிவேப்பிலை மல்லி புதினா சேர்த்து இறக்கவும்..


கறிவேப்பிலை மணத்துடன் பெப்பர் சிக்கன் தயார்...


நெய் சாதம்,பிரியாணி இவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


வாழைப்பூ பருப்பு கூட்டு

2 கருத்துகள்



வாழைப்பூ பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள் : 

வாழைப்பூ - 1 (சிறியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

கறிவடம் - சிறிது
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை : 

 1. வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு போட்ட நீரில் போட்டு    வைக்கவும்.வெங்காயத்தை மெல்லியதாகவும் மிளகாயை நடுவில் கீரியும் வைக்கவும்.
 2. பாசிப்பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
3. வேக வைத்த பருப்புடன் வாழைப்பூ, வெங்காயம், மிளகாய், தூள் வகைகள், உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
4. வாழைப்பூ வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

5. சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவற்றை தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

சுவையான வாழைப்பூ பருப்பு கூட்டு தயார்.


பிளைன் ரைசுடன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
பக்க உணவாகவும் சாப்பிடலாம்.



மட்டன் ஃப்ரை

0 கருத்துகள்





மட்டன் ஃப்ரை


தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு , ஏலக்காய் - தலா 1

செய்முறை : 

1.மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


3.பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசம் போனதும் தக்காளி, மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்.


4.தூள் வகைகள், தயிர் சேர்த்து ஒரு சேர பிரட்டவும்.



5.3/4 கப் தண்ணீர் சேர்த்து 6௮ விசில் வரை மட்டனை வேக விடவும்..


6.ப்ரஷர் அடங்கியதும் மட்டன் நன்கு வெந்து எண்ணெய் மினுமினுப்புடன் இருக்கும்..


7.ட்ரையாக வேண்டும் என்றால் சற்று நேரம் சிம்மில் வைத்து சுண்டியதும் இறக்கலாம்.
8.நான்  க்ரேவியாக வேண்டும் என்பதால் சிம்மில் வைக்கவில்லை.

சுலபமாக செய்ய கூடிய மட்டன் ஃப்ரை தயார்.


நெய்சாதம் ,தேங்காய் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
பரோட்டா, நாண், சப்பாத்தி போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.


சேனைக்கிழங்கு பொரியல்

2 கருத்துகள்


சேனைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. கிழங்கை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பின்னர் தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ளவும்.


2. கிழங்குடன் தூள் வகைகள் , உப்பு சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்.


3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கிழங்கை சேர்த்து பிரட்டி விடவும்.


4.அடுப்பை சிம்மில் வைத்து நன்கு மொறுமொறுப்பாக வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.

இந்த பொரியல் தயிர் சாதம் ,வெரைட்டி ரைஸ்க்கு நல்ல பக்க உணவாக இருக்கும்.



சிக்கன் டிக்கா ரோஸ்ட்

2 கருத்துகள்



சிக்கன் டிக்கா ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
சிக்கன் டிக்கா மசாலா - 2 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை , கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிது

செய்முறை :

1.சிக்கனை சுத்தம் செய்து 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது ,சிக்கன் டிக்கா மசாலா, தயிர் சேர்த்து நன்கு பிசிறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

2.சிக்கன் டிக்கா மசாலாவில் காரம், உப்பு எல்லாம் இருப்பதால் நாம் தனியாக எதுவும் சேர்க்க தேவையில்லை. முந்திரி ,தேங்காயை மைய விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3.வெங்காயத்தை மெல்லியதாகவும் ,மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.

4.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.



5. பின்னர் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...

6. ஊற வைத்த சிக்கன் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.தனியே நீர் சேர்க்க தேவையில்லை.



7.சிக்கன் வெந்ததும் முந்திரி , தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்..மல்லிதழை தூவி பரிமாறவும்.




சிக்கன் பிரியாணி

3 கருத்துகள்

சிக்கன் பிரியாணி



தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பழுத்த மிளகாய் - 3
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
முந்திரி - 10
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு , ஏலக்காய் - 2
உப்பு - 2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மல்லிதழை , புதினா - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை :

1.பாஸ்மதி அரிசியை களைந்து தண்ணீரில் 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.
2.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.முந்திரியை 1/2 மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3.கோழியை சுத்தம் செய்து பாதி அளவு இஞ்சிபூண்டு , 1 ஸ்பூன் மிளகாய் தூள், சோள மாவு,உப்பு சேர்த்து பிசிறி 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்..
4.பின்னர் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுக்கவும்.
5.அரிசியை களைந்து 3 கப் தண்ணீர் , 1 ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்..
6..கடாயில் நெய் ,எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வெங்காயம் , மிளகாய் சேர்த்து வதக்கவும்.




7.மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்..பச்சை வாசம் போனதும் தக்காளி ,மல்லி புதினா சேர்த்து குழைய வதக்கவும்.


8.முந்திரி விழுதினை சேர்க்கவும்..பின்னர் தூள் வகைகள் , உப்பு, தயிர் சேர்த்து பிரட்டி விடவும்...




9.பின்னர் வறுத்து வைத்த கோழி துண்டுகளை குருமாவில் சேர்த்து 1/2 கப் நீ\ர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்...




10.ஒரு பெரிய பாத்திரத்தில் பாதி அளவு சோறு, கொஞ்சம் குருமா, மீதி சோறு குருமா என அடுக்காக வைத்து ஒரு சேர அரிசி உடையாமல் பிரட்டி விடவும்.கடைசியில் 2 கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.



12.மேலாக கோழி துண்டுகள் வைத்து,மல்லி புதினா தூவி  விடவும்..
13.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து 10 நிமிடம் தம் போடவும்.


சூடான சிக்கன் பிரியாணி தயார்.
இதனை ஆனியன் ரைத்தா ,முட்டை ,கோழி வறுவல் உடன் பரிமாறலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes